குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் செல்கிறார்.
ராய்ப்பூரில் இன்று மாநில அளவில் நடைபெறும் பிரம்ம குமாரிகளின் “நேர்மறையான மாற்றத்தின் ஆண்டு” என்ற கருப்பொருள் மாநாட்டின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.
நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, ராய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடியினர் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுகிறார்.