கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடை பெற்று வருகிறது.
மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்களிலும், ஆலயங்களிலும் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சிலைகள் வரும் 22 -ம் தேதி மற்றும் 24 -ம் தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைகள், குழித்துறை தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விஜர்ஜனம் செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற, மீனச்சல் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் சமய வகுப்பு சார்பில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடை பெற்றது.
இதில், கணபதி, முருகன், ஶ்ரீகிருஷ்ணர் போன்ற கடவுள்களின் வடிவில் மாறுவேடம் பூண்டு ஊர்வலமாக கிராமத்தைச் சுற்றி பேரணியாகச் சென்றனர். இதில், ஏராளமானோர் பயபக்தியோடு கலந்து கொண்டனர்.