பொருளாதார நெருக்கடியின் விளம்பில் பாகிஸ்தான்!
Sep 2, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொருளாதார நெருக்கடியின் விளம்பில் பாகிஸ்தான்!

அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும் வறுமைக்கோடு: எச்சரிக்கும் உலக வங்கி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 02:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோடு நிலவரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், 34 சதவீதமாக இருந்த அந்நாட்டின் வறுமைக்கோடு அளவு திடீரென 40 சதவீதமாத அதிகரித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் பாகிஸ்தான் இருப்பதாகவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சுதந்திரத்துக்கு ஒரு நாள் முன்பாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது. இதன் பிறகு, இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து தற்போது உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடாகத் திகழ்கிறது. அதேபோல, விண்வெளித் துறையில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதின் மூலம் உலக வரலாற்றில் புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இது மட்டுமா? நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தையும் இந்தியா அனுப்பி இருக்கிறது.

ஆனால், பாகிஸ்தானின் நிலைமை? கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. ஒரு மூட்டை கோதுமைக்கு அடித்துக் கொண்டு ஏராளமான உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதனால், உணவுத் தேவைக்கு உலக நாடுகளிடமும், நிதித் தேவைக்கு உலக வங்கியிடமும் கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான். இதற்கு அந்நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதமும் முக்கியக் காரணமாகும்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றும்போது, நிலவில் தடம் பதித்தும், ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகித்து நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம்தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. இங்கு பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழலில், ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வரும் அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து, தேர்தல் வியூகம் குறித்து லண்டனில் இருந்தபடியே காணொளி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டதில் பங்கேற்ற நவாஸ் ஷெரீப், “கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது.

உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேசமயம்,  இந்தியாவோ நிலவில் தடம் பதித்தும், ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகித்து நடத்தியும் எங்கோ சென்றுவிட்டது. இந்தியா செய்திருக்கும் சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? இதற்குக் காரணம் நம் நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் மற்றும் நீதிபதிகள்தான். எதிர்வரும் தேர்தலில் நமது கட்சி பெரும்பான்மை பெறும். மீண்டும் ஆட்சியை பிடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இவ்வாறு கூறிய ஓரிரு நாட்களில், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாகவும், அந்நாட்டில் வறுமைக்கோட்டின் அளவு 40 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து, உலக வங்கி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பணவீக்கம், மின்கட்டண விலை உயர்வு மற்றும் போதுமான பொதுவளங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர்.

34 சதவீதமாக இருந்த பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோட்டின் அளவு ஒரே ஆண்டுக்குள்  40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 32 முதல் 40 சதவீதம் வரை ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, வீண் செலவினங்களைக் குறைக்க வேண்டும். பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருக்கிறது. பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மாத கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: pakistanWorld BankNavas Shareef
Share
Tweet
SendShare
Previous Post

அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம்!

Next Post

10 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies