முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!
Jun 13, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் உள்ள தேசிய இராணுவ அருங்காட்சியகம் முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் முக்கிய பங்களிப்பை விவரிக்கும் வகையில், “பிரிட்டிஷ் இந்திய இராணுவம்: முதல் உலகப் போரின் சிப்பாய்கள்” என்கிற தலைப்பில் கண்காட்சியை அமைத்திருக்கிறது.

1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரில், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் 14 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இப்போரில் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனில் முதல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் பிறகு, இந்தாண்டு மீண்டும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி நவம்பர் மாதம் 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் இந்திய இராணுவ வீரர்களின் புகைப்படங்கள், கலைப் படைப்புகள், ஆவணங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கண்காட்சி குறித்து அருங்காட்சியகத்தின் தொடர்பு அதிகாரி ஜூலியன் ஃபாரன்ஸ் கூறுகையில், “ முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இக்கண்காட்சி முதல் உலகப் போரில் இந்தியர்களின் முக்கியப் பங்கை விவரிக்கிறது. இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல் எங்களால் போரை நடத்தி இருக்க முடியாது.

முதல் உலகப் போர் பற்றிய இங்கிலாந்தின் பிரபலமான நினைவகத்தில் இந்தியப் படைகளின் பங்கு கவனிக்கப்படாத ஒரு விஷயமாக இருந்தாலும், அவர்களது பங்களிப்பை இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் நினைவுகூர்வதை நாங்கள் வழக்கமாக வைத்திருக்கிறோம். பிரிட்டிஷ் இராணுவத்தில் பல்வேறு நாடுகள் தங்களது பங்களிப்பை அளித்திருந்தாலும், இந்திய வீரர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்” என்றார்.

Tags: Londonindian soldiersvital roleworld warnational army museumexhibition
ShareTweetSendShare
Previous Post

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

Next Post

காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!

Related News

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies