பிரதமர் மோடியின் சாதனை: அமித்ஷா பெருமிதம்!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் சாதனை: அமித்ஷா பெருமிதம்!

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றதாக புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்கேஜ் வார்டிலுள்ள ஒகாஃப் ஏரியின் சீரமைப்புப் பணிக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அமித்ஷா, “நிலவில் மூவர்ணக் கொடியை ஏற்றியதன் மூலம், இந்தியாவும், உலகமும் தங்கள் திறமையை இந்த உலகுக்குக் காட்டி இருக்கின்றன. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தொகுதி ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதின் மூலம், இந்தியா ஒரு மாபெரும் உத்வேகத்தை பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.

மேலும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரயான்-2 விண்கலம் விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம், சந்திரயான்-3, ஜி20, நாரி சக்தி சட்டம் ஆகிய 4  வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாத கால இடைவெளியில் செய்து முடித்திருக்கிறார். இது இதுவரை யாராலும் செய்யப்படவில்லை.

மேலும், விநாயக சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது தலைமையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் நிறைவேற்றினார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சட்டத்தை செப்டம்பர் 21-ம் தேதி நாடாளுமன்றம் நிறைவேற்றியது” என்றார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மக்களவையில் உள்ள 454 உறுப்பினர்களில் 2 பேர் தவிர மற்ற அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல, மாநிலங்களவையில் மொத்தமுள்ள 214 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, தனது மக்களவைத் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். காந்திநகரின் பாலாஜில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இது தவிர, காந்திநகரின் பலாஜ் என்ற இடத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

Tags: Amit shaGujrat
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்!

Next Post

டிராவல் மார்ட் 46- வது கண்காட்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies