ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட்: ஐ.ஓ.சி. அதிரடி!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட்: ஐ.ஓ.சி. அதிரடி!

உக்ரைன் மீதான போரை கண்டித்து நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதை கண்டித்து, அந்நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இடைநீக்கம் செய்திருக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.)  கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அவ்வமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் மூலம், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள  விளையாட்டு அமைப்புகளை  ரஷ்யா தங்களுடன் இணைத்துக் கொண்டது. இது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என்றும், ஆகவே, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒலிம்பிக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கு இனி தேசிய ஒலிம்பிக் கமிட்டியாக செயல்பட உரிமை இல்லை. அதோடு, ஒலிம்பிக் இயக்கத்திடம் இருந்து எந்த நிதியுதவியும் பெற முடியாது. இந்த இடைநீக்க நடவடிக்கையின் காரணமாக, ரஷ்ய வீரர்கள் தங்களது நாட்டு அடையாளத்துடன ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

அதேசமயம், எந்த நாட்டையும் சேராத நபர்களாக போட்டிகளில் பங்கேற்பதில் எந்த பாதிப்பும் இருக்காது. எனினும், இது இன்னும் மாறக்கூடும். 2024 பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் 2026 மிலானோ கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் ரஷ்ய பாஸ்போர்ட்டுடன் தனி நபர்களாக விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் உரிமை ஐ.ஓ.சி.க்கு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. மேலும், ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சர்வதேச விளையாட்டு அமைப்பான ஒலிம்பிக் கவுன்சிலிலிருந்து ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Tags: International olympic committeeSuspendsRussian Olympic team
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநர் மாளிகை நவராத்திரி விழா – பொது மக்களுக்கு வாய்ப்பு!

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies