4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Oct 28, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை முதல் 24-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இது அடுத்த மூன்று நாட்களில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: chennai rainheavyrainfall
Share
Tweet
SendShare
Previous Post

தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு இவர் தான் காரணமா ?

Next Post

10-ஆம் நூற்றாண்டு தேவி சிலை கண்டுப்பிடிப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies