மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம்!
Sep 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம்!

கோவாவில் முதல் முறையாக நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு வருகின்ற 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.  பிற்பகல் 1 மணியளவில், அகமதுநகர் மாவட்டம், ஷீரடி செல்லும் பிரதமர், ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். கோவிலில் புதிதாக  கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

பிற்பகல் 2 மணியளவில், பிரதமர், நில்வாண்டே அணையில் ஜல பூஜை செய்து, அணையின் கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பிற்பகல் 3:15 மணியளவில், ஷீரடியில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர்  கலந்து கொள்கிறார், அங்கு சுகாதாரம், ரயில், சாலை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ .7500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். மாலை 06:30 மணியளவில் கோவா செல்லும் பிரதமர், அங்கு 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத்  தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிராவில் பிரதமர்: ஷீரடியில் பிரதமர் திறந்து வைக்கும் புதிய பக்தர்கள் வரிசை  வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்பு பகுதிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மெகா கட்டிடமாகும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வகையில் பல காத்திருப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியுடன் கூடிய பொது வசதிகளான பொருள்  வைப்பறைகள், கழிவறைகள், முன்பதிவு அரங்குகள், பிரசாத அரங்குகள் , தகவல் மையம் போன்றவை உள்ளன. இந்தப்  புதிய வளாகத்திற்கு 2018 அக்டோபரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நில்வாண்டே அணையின் இடது கரை (85 கி.மீ) கால்வாய் கட்டமைப்பை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன் மூலம் 7 தாலுகாக்கள் அடங்கிய 182 கிராமங்கள் (அகமதுநகர் மாவட்டத்தில் 6 மற்றும் நாசிக் மாவட்டத்தில் இருந்து 1) குடிநீர் விநியோகத்தைப்  பெற்று பயன் அடையும்.

இந்தப் பொது நிகழ்ச்சியின் போது, ‘நமோ உழவர் மரியாதை நிதி’என்னும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிராவில் பிரதமரின்  கிசான் நிதி திட்டத்தின் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கூடுதல் தொகையை வழங்குவதன் மூலம் இந்தத்  திட்டம் பயனளிக்கும்.

அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை; குர்துவாடி-லத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ); ஜல்காவோன் மற்றும் பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 வது மற்றும் 4 வது ரயில் பாதை;   என்.ஹெச்-166 இன் சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மன்மத் முனையத்தின் கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல்  நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளை  பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குவார்.

கோவாவில் பிரதமர்:  

கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டித  ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை அக்டோபர் 26, 2023 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.

கோவாவில் முதன்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.   அக்டோபர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 28 இடங்களில், 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக கொடி கம்பம் அகற்றம்: நேற்று சென்னை – இன்று தென்காசி – தொண்டர்கள் கொதிப்பு!

Next Post

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு வெறும் வதந்தியாம்!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies