சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்! - ஆந்திர உயர்நீதிமன்றம்.
Aug 17, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்! – ஆந்திர உயர்நீதிமன்றம்.

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி ஆந்திர பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர்.

விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். அதில், சிறையில் இருக்கும் தனக்கும், வெளியில் இருக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதனால் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் Z பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் திறன் மேம்ப்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்தார்.

சட்ட போராடத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு நான்கு வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Tags: chandrababu naiduAndra Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல்!

Related News

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies