நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போதிய சாலை வசதிகள் இல்லை. மேலும், மாநிலத்தில் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன. இதனால், பெரும்பாலும் நீர் வழிப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆற்றைக் கடக்க பெரிய படகுகளை பயன்படுத்துகின்றனர். இப்படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி, மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏற்பட்ட படகு விபத்துகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நேரிட்ட விபத்தில் மட்டும் 103 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், மற்றொரு படகு விபத்தில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நைஜீரியாவின் தாரபா மாநிலத்தில் மிகப்பெரிய பென்யூ ஆறு ஓடுகிறது. எல்லாத் தேவைகளுக்கும் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில், அர்டோகோலா மாகாணத்தின் கரீம் லாமிடோ மாவட்டத்தில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு குழந்தைகள், வணிகர்கள் உட்பட்100-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் நடுவழியில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் மற்றும் மீனவர்கள் நீரில் தத்தளித்தவர்களை மீட்க உதவினர். மேலும், தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 14 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.

மேலும், 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்களை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். எனினும், இவ்வளவு நேரம் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags: accidentboatNigeria
Share
Tweet
SendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு 3 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies