சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அதிகளவில் பணம் கொடுத்திருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அம்மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அசிம் தாஸ் என்கிற இடைத்தரகா் ராய்பூரில் 5.39 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இப்பணம் மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் சத்தீஸ்கர் மாநிலத் தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்ட பணம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அசிம் தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது செல்போனில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு ஆகியவை சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.

பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள 15.59 கோடி ரூபாய் சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, பண விவகாரம் தொடர்பாக செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உட்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ChhattisgarhCM Bupesh Bahel508 crores
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல்!

Next Post

சென்னையில் கனமழை: திமுக அரசு அலட்சியம் – மக்கள் வேதனை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies