பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்திற்குள் இன்று காலை 6 தீவிரவாதிகள் திடீரென நுழைந்தனர். அங்கு இருந்து விமானங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதனையடுத்து சுதாரித்த கொண்ட விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டனர். இந்த சண்டையில் 3 விமானங்கள் சேதம் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் சேதம் அடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நடத்தப்பட்ட தீவரவாத தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.