கலந்தாய்வில் முறைகேடு - செவிலியர்கள் சங்கம் பரபரப்பு புகார்!
Aug 23, 2026, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலந்தாய்வில் முறைகேடு – செவிலியர்கள் சங்கம் பரபரப்பு புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 03:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு 20-ம் தேதி முதல் முதல் 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை.

கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், வெறும் இரண்டு பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு வெறும் 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு வெறும் 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இதே போன்ற நிலைதான் பின்பற்ற பட்டுள்ளது.

மேலும் பணியிட மாற்ற கலந்தாய்வு விண்ணப்பங்கள் கொடுத்த பல செவிலியர்களின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறாமல் அந்தச் செவிலியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கு பெற்று வேறு பணியிடத்தைத் தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களைக் காலி பணியிடங்களாக அறிவித்து மீண்டும் அந்தப் பணியிடங்களைச் செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்தக் கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிப்படை தன்மையற்ற பல குறைகளுடன் நடத்தப்படும் கலந்தாய்வால் செவிலியர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

இதனால், பெரும்பாண்மையான செவிலியர்கள் பணியிடம் ஏதும் தேர்வு செய்யாமல் வருத்தத்துடனும் பெரும் ஏமாற்றத்துடனும் சென்றுள்ளனர். இது அரசுக்கு மிகவும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எனவே, இந்த விவகாரத்தில் குறைகளைக் களைந்து அனைத்து பணியிடங்களையும் வெளிப்படையாகக் காண்பிப்பதுடன் அனைத்து செவிலியர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெறவும் முதல் நாளில் காலியாகும் பணியிடங்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து செவிலியர்களுக்குப் பயன் பயக்கும் விதமான கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Nurses strike
Share
Tweet
SendShare
Previous Post

கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா vs கத்தார்!

Next Post

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Related News

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies