இராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து!
Jun 13, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே இரசாயன ஆலையில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்தது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள முசிறி பகுதியில், சன்பிக்ஸ் என்ற தனியார் இரசாயானத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு இரசாயனங்கள் மற்றும் ஆசிட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆசிட் தேக்கி வைக்க 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன.

இந்த நிலையில், தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் பாலி அலுமினியம் குளோரைடு ஆசிட் தேக்கி வைக்கப்பட்டிருந்த இராட்சத டேங்க் வெடித்தது.

இந்த ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆசிட்டில் இருந்து வரும் நச்சு புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால், தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அப்பகுதி வழியகச் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டது.

இந்த ஆசிட்டில் நச்சுத் தன்மை குறைவாக இருந்ததால், தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புக் குழுவினர், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு, ஆசிட்டின் மீது தண்ணீரை அடித்தும், எம் சாண்டைக் கொட்டியும் ஆசிட்டின் வீரியத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விபத்துக்குள்ளான தொழிற்சாலையை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் இரவிச்சந்திரன் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கூட்டுறவு வங்கி மோசடி: மாஜி தலைவர் மகனுடன் கைது!

Next Post

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடுவதாக அறிக்கை !

Related News

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோட்; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies