ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!
Sep 5, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களில் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பதற்றம் நிறைந்த 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் கடந்த 7-ம் தேதி நடந்தன.

தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்காக வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவும் கடந்த 17-ம் தேதி நடந்தன.

இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், 74.13 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி  இருக்கிறது.

மொத்தமுள்ள 51,507 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 69,114 காவலர்கள், 32,876 ராஜஸ்தான் ஊர்க்காவல் படையினர், வனக்காவலர்கள் மற்றும் ஆர்.ஏ.சி. பணியாளர்கள், 700 கம்பெனி சி.ஏ.பி.எஃப். வீரர்கள் என மொத்தம் 1,02,290 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Tags: ElectionRajasthanPolls74.13%
Share
Tweet
SendShare
Previous Post

கிரிக்கெட்டில் அரசியல் செய்யும் பாகிஸ்தான் !

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies