நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!
Sep 12, 2026, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களும் நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று இரு மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, இரு மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்ததும், மசோதா மீதான விவாதங்கள் நடைபெற்றது. விவாதங்களின் இறுதியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீர் பண்டிட்கள் இடம்பெயர்ந்தபோது சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏறக்குறைய 46,631 குடும்பங்கள் தங்கள் தாயகத்திற்குள் இடம்பெயர்ந்தனர். இந்த மசோதா அவர்களின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உரிமைகளை வழங்குவதற்கும், மரியாதையுடன் உரிமைகளை வழங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் மிகப் பெரிய தீங்கு விளைவித்திருக்கிறது. மாறாக, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டார். எனவே, நலிவடைந்த மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பதிலாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்வது முக்கியம்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் இதுவரை 45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் தீவிரவாத சூழலை ஒழிப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கும். 2024-ல் மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறேன். 2026-ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவம் நடக்காது என்று நம்புகிறேன். இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறினால், முழு மாநில அந்தஸ்தை வழங்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கும், முக்கியமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு, பின்னர் காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றார். நேரு மட்டும் சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு” என்றார்.

Tags: ParliamentAmit shaJammu Kashmir Bills
Share
Tweet
SendShare
Previous Post

மூன்று மாநிலங்களிலும் ரெட்டை எஞ்சின் அரசு அமைந்தது போல் தமிழகத்திலும் அமைய வேண்டும்!

Next Post

முக்கியத் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies