எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு!
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எண்ணூரில் மழை நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்தது தொடர்பாக, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெரும்  ழையைக் காரணம் காட்டி, சென்னை எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் சத்தமின்றித் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதைக் கண்டும் காணாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வெட்டவேண்டியதை வெட்டிவிட்டு, சத்தமில்லாமல் ரசாயன கழிவுகளை வெளியேற்றியுள்ளனர்.

இந்த பிரச்சனை சென்னை எண்ணூருக்கு புதிது. ஆனால், கரூர் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளில் இது சாதாரணம். காரணம், இது அடிக்கடி நடப்பது வழக்கம்.

ஏற்கனவே, வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் சென்னை எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. திமுக அரசு எந்த அளவுக்குச் செயல் இழந்துள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி இருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை உரிமையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொழிற்சாலைகளின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை அந்த நிறுவனமோ அல்லது தமிழக அரசோ உடனே வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், போராட்டம் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், தற்போது, தாமாக முன்வந்து விசாரிக்கிறது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். இது தொடர்பான விசாரணை நாளை காலை பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: Oil spills in EnnoreSouthern Regional Green Tribunalsuo motu case
Share
Tweet
SendShare
Previous Post

2024- ல் பாரத் டெக்ஸ் என்ற உலக மகா ஜவுளி நிகழ்வு!

Next Post

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies