7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது!
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 11:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் மின்னேற்றி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க 3 எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என மாநிலங்களவையில்  மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மின்சார / ஹைபிரிட் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக கனரக தொழில்கள் அமைச்சகம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான முன்னெடுப்பு மற்றும் உற்பத்தி (ஃபேம் இந்தியா) என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019 மார்ச் 31 வரை ரூ. 895 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக சுமார் 2.8 இலட்சம் மின்சார வாகனங்களுக்கு ரூ.359 கோடி அளவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் முதல் கட்டமாக 425 மின்சார மற்றும் ஹைபிரிட் பேருந்துகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் சுமார் ரூ.280 கோடியில் அரசின் ஊக்கத்தொகையுடன் இயக்கப்படுகின்றன.

ஃபேம்-இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 520 மின்னேற்ற நிலையங்கள் / உள்கட்டமைப்புகளுக்கு ரூ.43 கோடிக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் போது பெறப்பட்ட முடிவுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலும், தொழில் மற்றும் தொழில் சங்கங்கள் உட்பட அனைத்து   பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவுசெலவுத் திட்ட ஆதரவுடன் அரசு அறிவித்தது.

இந்த இரண்டாவது கட்டம் முக்கியமாக பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தை மின்மயமாக்குவதை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது, மேலும் 7090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார  வாகனங்கள், 55000 மின்சார  கார்கள்,  10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11,61,350 மின்சார வாகன   உற்பத்தியாளர்களுக்கு ரூ.5248.00 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நகரங்கள் / அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் / மாநில அரசு நிறுவனங்களுக்கு 6862 மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

29.11.2023 நிலவரப்படி 6862 மின்சார பேருந்துகளில் 3487 மின்சார பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

7,432 மின்சார வாகன பொது மின்னேற்றி நிலையங்களை நிறுவுவதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ 800 கோடி மூலதன மானியமாக கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 148 மின்னேற்றி  நிலையங்கள் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஃபேம்- இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளர்கள் / நிறுவனங்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இந்த ஊக்கத்தொகை / சலுகை நுகர்வோருக்கு ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் முன்கூட்டியே குறைக்கப்பட்ட கொள்முதல் விலை வடிவத்தில் வழங்கப்படுகிறது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களுக்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள பிற நிறுவனங்களுக்கு 148 மின்சார வாகன நிலையங்களுக்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags: 7432 electric vehicle charging stations
Share
Tweet
SendShare
Previous Post

குணச்சித்திர நடிகர் மதுரை மோகன் காலமானார்!

Next Post

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies