உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமார் 5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாடு வெளியேற்றி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும், உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.
கடந்த 1979-89-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் இருந்து, பாகிஸ்தான் சுமார் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. எனினும், சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஆப்கானிஸ்தான் அகதிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை அடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.