எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அது ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான இல்லத்தரசி பிரியங்கா தேவியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த இல்லத்தரசியும் வி.பி.எஸ்.ஒய் பயனாளியுமான பிரியங்கா தேவி, தனது கணவர் மும்பையில் தினக்கூலியாக வேலை செய்கிறார் என்றும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் போதும் அதற்குப் பின்னரும் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமடைந்த பின்னர். ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் மற்றும் ஜன் தன் யோஜனா ஆகியவற்றின் நன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
அவர் வசிக்கும் பகுதிக்கு வந்த மோடியின் உத்தரவாதம்’ வாகனம் குறித்த ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார், வி.பி.எஸ்.ஒய் வேன் மிதிலா பிராந்தியத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களால் வரவேற்கப்பட்டது என்று திருமதி பிரியங்கா பதிலளித்தார். அரசாங்கத்தின் நன்மைகள் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள உதவியதாக அவர் மேலும் கூறினார்.
திருமதி பிரியங்கா அவரது கிராமத்தில் அரசாங்க திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ‘மோடியின் உத்தரவாத’ வாகனம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைவதாக திருப்தி தெரிவித்தார்.
எந்தவொரு திட்டமும் வெற்றி பெற அந்த திட்டம் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் நேரில் சென்று உதவி அளிக்க முடியாத பயனாளிகளை ‘மோடியின் உத்தரவாதம்’ வாகனம் மூலம், அடைய முயற்சிப்பதாகவும், தகுதியான ஒவ்வொரு குடிமகனையும் உள்ளடக்குவதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பெண் சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பிளவுபடுத்தும் அரசியலைப் பற்றி பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்தார்.
“பெண்கள் ஒரு ஒற்றை சமூகம்” அவர்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. இந்த சமூகம் மிகவும் பெரியது, அவர்கள் எந்த சவாலையும் ஏற்க முடியும்”, என்றும் அவர்களுக்கு அரசின் தடையற்ற ஆதரவு உண்டு என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.