வாட்சப்பில் ஆடியோ குறுஞ்செய்திகளை ஒன் டைம் வியூ (One time view) மூலம் அனுப்பும் புதிய அப்டேட் வரவுள்ளது.
இன்று உலகமே நவீனமயாகி வருகிறது. குறிப்பாக, யாருமே இதுவரை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவு செல்போன்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று ஒவ்வொரு மனிதர்களிடமும் செல் போன் மற்றும் ஸ்மார்ட்போன் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் தொலைபேசியில் பார்த்தால் அதில் அவர்களின் புகைப்படம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் வாட்சப் செயலி இருக்கும். இப்படி தொலைபேசிகளுக்கு அத்தியாவசியமாக இருக்கும் வாட்சப் செயலி தன்னை மேம்படுத்தும் விதமாக புது புது அப்டேட்களை செய்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தற்போது வாட்சப் செயலி புது அப்டேடை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஆடியோ குறுஞ்செய்திகளையும் இனி ஒன் டைம் வியூ (One time view) மூலம் அனுப்பும் புதிய வசதியை அளிக்கவுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளுக்கு ‘ஒன் டைம் வியூ’ எனும் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா நிறுவனம்.