இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!
Oct 19, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சா் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ஒழுங்காற்று விதிகள், பிற துறை ரீதியிலான விதிமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்க முடியும்.

நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 380-ன் கீழ் இந்நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் நிறுவனங்கள் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், சீனாவைச் சோ்ந்த 53 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கான தரவுகள் இல்லை.

மேலும், நிறுவனங்கள் சட்டத்தில் ‘போலி நிறுவனங்கள்’ குறித்த வரையறை இல்லை. இருப்பினும், பதிவு செய்த நிறுவனம் ஓராண்டுக்குள் தனது வணிக செயல்பாட்டைத் தொடங்கவில்லை என்றாலோ, அல்லது தொடா்ச்சியாக இரு நிதியாண்டுகளுக்கு எவ்வித வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றாலோ, நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248 (1)-ன் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அந்நிறுவனத்தின் பதிவை நிறுவனங்கள் பதிவாளா் ரத்து செய்ய முடியும்.

மேலும், இத்தகைய காலத்தில் செயல்படாத நிறுவனம் என்று அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கத் தவறினாலும் அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். கடந்த 2021 ஏப்ரல் 4 முதல் கடந்த மாதம் 28-ம் தேதி வரை 1,55,217 நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentchinaCompanies
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி!

Next Post

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்! – மத்திய அரசு

Related News

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் போர் முடிவடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்தி கற்பதை வேண்டாம் என சொல்ல மாட்டோம் – சேகர்பாபு

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சீனா : பெண்கள் மத்தியில் வேகமெடுத்து வரும் கென்ஸ் கலாச்சாரம்!

அமெரிக்கா : 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்பை வெளியேற்றும் கிலாவியா எரிமலை!

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து!

திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம்!

ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் – நீதிபதியுடன் வழக்கறிஞர் ஒருவர் கடும் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டத்தில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

உத்தரபிரதேசம் : எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies