ராஜஸ்தான் முதல்வர் இன்று பதவியேற்பு!
Jun 14, 2026, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் முதல்வர் இன்று பதவியேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநில முதல்வராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், 3 மாநில முதல்வர்கள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, 3 மத்தியப் பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இக்குழுக்களுக்கு தலைமை வகித்தனர்.

இதில், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்கும், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு ராஜஸ்தான் மாநிலத்துக்கும் நியமிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதலில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, முதல்வராக விஷ்ணு தியோ சாயை தேர்வு செய்தது.

அடுத்ததாக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான குழு மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வராக மோகன் யாதவைத் தேர்வு செய்தது.

இதன் பிறகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வராக பஜன் லால் ஷர்மாவை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர்கள் கடந்த 13-ம் தேதி பதவியேற்றனர். இந்த சூழலில், ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: RajasthanswornChief Minister
ShareTweetSendShare
Previous Post

தேச ஒற்றுமையின் பிரதிபலிப்பு : சர்தார் வல்லபாய் படேல்! – அமித் ஷா

Next Post

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies