தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!
Sep 20, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 05:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்து உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களும், புத்தகங்களும், முக்கிய ஆவணங்களும், ஆடை, அணிகலன்களும் என அனைத்தும் நாசமானது.

பால், உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். மின்சாரம், இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

திருநெல்வேலியில் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

தற்போது மழை ஓய்ந்து, வெள்ளம் வடிய தொடங்கி உள்ள நிலையில், இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மட்டும் 11 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், மானூர் காந்தீஸ்வரம் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேரும், வீட்டு சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்து உள்ளது.

Tags: nellai heavy rain
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறை சம்மன்: 2-வது முறையாக புறக்கணித்த கெஜ்ரிவால்!

Next Post

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!

Related News

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More

அண்மைச் செய்திகள்

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies