ஏர் இந்தியா நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் A350 விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.
ஏர் இந்தியாவின் முதல் வைட் பாடி ஏர்பஸ் கேரியர் 20 A350-900 முதல் விமானம் பிரான்சின் துலூஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் 1.46 மணிக்கு டெல்லி வந்தது. மேலும் ஐந்து விமானங்கள் மார்ச் 2024 இல் வரவுள்ளது.
இந்த விமானம் மூன்று-வகுப்பு கேபின் கட்டமைப்பில் 316 இருக்கைகளுடன் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் வடிவமைத்துள்ளது. முழு தட்டையான படுக்கைகள் கொண்ட 28 தனியார் வணிக வகுப்பு அறைகள், 24 பிரீமியம் எகானமி இருக்கைகள் வசதி உள்ளது.
விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் சமீபத்திய தலைமுறை Panasonic eX3 இன்-ஃப்ளைட் பொழுதுபோக்கு அமைப்பு மற்றும் சிறந்த பறக்கும் அனுபவத்தை வழங்க HD திரைகள் உள்ளன.
ஆரம்பத்தில் குறுகிய தூர வழித்தடங்களில் இந்த விமானம் இயக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் தலைவர் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார். இந்த விமானம் உலகத்தரம் வாய்ந்த, நீண்ட தூர பயண அனுபவத்தையும், இணையற்ற சௌகரியத்தையும் தரும் என்றும் அவர் கூறினார். அதன் அதிநவீன தொழில்நுட்பம், வணிக ரீதியாக வெற்றிகரமான செயல்பாடுகள் மற்றும் எங்கள் நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.