சி.ஏ.ஏ. சட்டத்தை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா மீண்டும் உறுதி!
Apr 29, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.ஏ.ஏ. சட்டத்தை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா மீண்டும் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தங்களது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது. எனவே, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, தங்களது கட்சி நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, பா.ஜ.க. அமைப்புகள், சமூக வலைத்தளப் பிரவு, ஐ.டி. பிரிவு உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் சென்றிருந்தனர்.

அப்போது பேசிய அமித்ஷா, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) நமது நாட்டினுடைய சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இச்சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு என்பதை தெளிவாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் பா.ஜ.க. 35 இடங்களைப் பிடிக்கும். அதேபோல, அடுத்து நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.

பா.ஜ.க. என்பது ஊடுருவலை தடுப்பது, பசுக் கடத்தல் மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் குடியுரிமை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. ஆகவே, சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

Tags: Amit Shahwest bengalmeetingJ.P.NaddaBJP executives
ShareTweetSendShare
Previous Post

தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை! – நிர்மலா சீதாராமன்

Next Post

நள்ளிரவில் அமோனியா வாயு கசிவு! – பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies