சென்னை - ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடக்கம்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவில் ஜித்தா நகருக்கு சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. அந்த விமான சேவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் ஜித்தா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது.

இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்திற்கு செல்பவர்களும் வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாக செல்ல வேண்டி இருந்தது.

இதனால் சவூதிக்கு அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் ஏற்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதல் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஜித்தா- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால் அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின் இயக்குகிறது. ஜித்தாவிற்கு நேரடியாக செல்வதால் ஐந்தரை மணி நேரத்தில் செல்வதால் பயண நேரம் குறைகிறது. மேலும் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024ம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்தி 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 17 நாள் கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாக கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலக இஸ்லாமிக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிதி ராணியுடன் நானும் வருகிற ஜனவரி 19ந் தேதி பங்கேற்க உள்ளோம்.

இந்திய ஹஜ் பயணிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. முதல் விமானத்தை வெற்றிகரமாக்கிய விமான நிலைய ஆணையம், சுங்க இலாகா, சி.ஐ.எஸ்.எப்., குடியுரிமை, தமிழக போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை- ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கும் வேலைக்காக செல்பவர்களும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: chennai airportairport
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் வியூகம்: தெலங்கானாவில் அமித்ஷா!

Next Post

விஜயகாந்த் பூதவுடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்! – அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies