குழந்தை ராமர் சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தை ராமர் சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு!

அயோத்தி இராமர் கோவிலில் நிறுவுவதற்காக 3 சிலைகள் வடிவமைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி கோவிலில் நிறுவுவதற்காக குழந்தை ராமர் சிலையை தேர்வு செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. கோவிலின் கருவறைக்குள் நிறுவுவதற்காக 3 வெவ்வேறு இராமர் சிலைகள் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் கூட்டத்தில் இன்று நடைபெறுகிறது.

இதனிடையே ஸ்ரீ ராம் மந்திர் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா  ராம ஜென்மபூமி பாதை மற்றும் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இதனிடையே இராமர் கும்பாபிஷேக விழா தொடர்பான நிகழ்ச்சிகள் வெளியாகியுள்ளது.  ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறும். ஜனவரி 16 ஆம் தேதி, கோயில் அறக்கட்டளை நியமித்துள்ள புரவலர் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பரிகார நிகழ்ச்சியை நடத்துவார்.சரயு நதிக்கரையில் ‘தஷ்வித்’ குளியல், விஷ்ணு வழிபாடு,பசுக்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, ஜனவரி 17ஆம் தேதி,ராமர் சிலையை அவரது குழந்தை போன்ற வடிவில் (ராம் லல்லா) சுமந்த ஊர்வலம் அயோத்தியை அடையும். மங்கள கலசத்தில் சரயு ஜலத்தை சுமந்து வரும் பக்தர்கள் ராமஜென்மபூமி கோவிலை அடைவார்கள்.

ஜனவரி 18ஆம் தேதி கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜையுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.

ஜனவரி 19ஆம் தேதி  நவகிரகங்கள்’ மற்றும் ‘ஹவன்’ (நெருப்பைச் சுற்றியுள்ள புனித சடங்கு) நிறுவப்படும்.

ஜனவரி 20 ஆம் தேதி ராம ஜென்மபூமி கோவிலின் கருவறை சரயு நீரால் கழுவப்பட்டு, அதன் பிறகு வாஸ்து சாந்தி மற்றும் ‘அன்னாதிவாஸ்’ சடங்குகள் நடைபெறும்.

ஜனவரி 21 ஆம் தேதி, குழந்தை ராமர் சிலை 125 கலசங்களில் குளிப்பாட்டப்படும்.

ஜனவரி 22-ம் தேதி காலை பூஜைக்குப் பிறகு மதியம் ‘மிருகசிர நட்சத்திரத்தில்’குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்படும்.

Tags: ayodhyaRamar TempleVoting on Lord Ram Lalla's idolShri Ram Janmabhoomi Teerth KshetraLord Ram Lalla's idol selection
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்துக்கு அஞ்சலி: தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் தூய்மைப் பணி! – அண்ணாமலை அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies