பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: தொடங்கியது கவுண்டவுன்!
Apr 29, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: தொடங்கியது கவுண்டவுன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை (1-ம் தேதி) காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தவிருக்கும் நிலையில், அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்குத் தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைக்கோளை நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில், திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த “வெசாட்” என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இவை தவிர, இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த மேலும் 10 பேலோடுகள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. இந்த சூழலில், இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கி இருக்கிறது.

தொடர்ந்து, நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைக் காண மாணவர்கள், பொதுமக்கள் என 10,000 பேர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் 650 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இச்செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான “நெபுலா” உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.

அதேபோல, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த “வெசாட்” என்ற செயற்கைக்கோள், காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

Tags: rocketsatellitePSLV C-58Tomorrow
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.23 அடியாக அதிகரிப்பு!

Next Post

மழை,வெள்ள பாதிப்பு : காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies