ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!
Sep 12, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜன் ஔஷதி கேந்திரா மூலம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லியில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பி.ஏ.சி.எஸ்.) தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவின் சிறந்த செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை 5 மாநிலங்களில் உள்ள பி.ஏ.சி.எஸ். நிறுவனங்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இதுவரை அரசாங்கத்தின் ஜன் ஔஷதி கேந்திராக்கள் நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பெரும்பாலும் நகரங்களில் திறக்கப்பட்டன.

இதன் மூலம் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான மருந்துகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, இந்த நன்மை கிராமப்புற ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில், ஜன் ஔஷதி கேந்திராக்கள் கிராமப் புறங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் பி.ஏ.சி.எஸ்.லிருந்து 4,470 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 2,373 பி.ஏ.சி.எஸ்.களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 241 ஜன் ஔஷதி கேந்திராக்கள் இயக்கத் தொடங்கி இருக்கின்றன.

கிராமப்புறங்களில் இந்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதால், மக்கள் பொது மருந்துகளை மலிவு விலையில் வாங்கலாம். உதாரணமாக, வெளிச்சந்தையில் 2,250 ரூபாய்க்கு விற்கப்படும் புற்றுநோய் மருந்துகள், வெறும் 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. பெண்களும்கூட, இந்த மையங்களில் 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை வாங்கலாம்.

மேலும், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்திரதனுஷ், ஜல் ஜீவன் மிஷன், டிஜிட்டல் ஹெல்த், மலேரியா ஒழிப்பு மிஷன், டிபி முக்த் பாரத் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் நாட்டின் சுகாதாரத்தை பெருமளவில் மாற்றியுள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கடந்த சில மாதங்களில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட பி.ஏ.சி.எஸ்.கள் ஆன்லைனில் பதிவு செய்தன. இவற்றில் 2,300-க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 500 பி.ஏ.சி.எஸ்.கள் ஜன் ஔஷதி கேந்திராக்களை தொடங்கி இருக்கின்றன.

நாட்டில் 10,500-க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கி வருகின்றன. இவை 1,965-க்கும் மேற்பட்ட உயர்தர மருந்துகள் மற்றும் 293 அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை சந்தையில் கிடைக்கும் பிராண்டட் மருந்துகளின் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில், கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் பி.எல்.வர்மா, கூட்டுறவுச் செயலர் ஞானேஷ் குமார், மருந்துத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Amit ShahHome ministeraddressesNational PACS Mega Conclave
Share
Tweet
SendShare
Previous Post

ஐஎன்எஸ் கப்ரா இலங்கையின் கொழும்பு துறைமுகம் சென்றது!

Next Post

கிழக்கு தைமூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies