இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைத் கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதில் கடைசி டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிய 6 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 6 பௌண்டரீஸ் என மொத்தமாக 26 ரன்களை எடுத்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 2 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 29 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 2 ரன்களும், ஹர்மன்ப்ரீத் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 2 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என மொத்தமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய தீப்தி சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க அமன்ஜோத் கவுர் 17 ரன்களும் பூஜா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஷ்லீ, மேகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி 52 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தஹ்லியா மெக்ராத் 20 ரன்களில் ஆட்டமிழக்க, எல்லிஸ் பெர்ரி டக் அவுட் ஆனார்.

பின்பு களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 17 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 19வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தார்.

இந்திய அணியில் பூஜா 2 விக்கெட்களும், தீப்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைத் கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகி விருது அனாபெல் சதர்லேண்ட் அவர்களுக்கும் தொடரின் நாயகி விருது அலிசா ஹீலி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

Tags: Australiawomens cricket team
Share
Tweet
SendShare
Previous Post

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர்: மக்கள் அவதி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies