அயோத்தி ராமர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது - ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர்!
Jul 26, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது – ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர்!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் உள்ள தொடர்ப்பை பற்றி பார்ப்போம்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கும், 108 திவ்ய தேசத்தில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், நெருங்கிய தொடர்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ஸ்ரீரங்கம் கோயிலின் தலைமை அர்ச்சகர்.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் உள்ள தொடர்ப்பை பற்றி பார்ப்போம்.

நம் அனைவருக்குமே குலதெய்வம் என்று ஒரு கோவில் இருக்கும் அதுபோல் மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். இதனை நிரூபிக்கும் வகையிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கநாதருக்கு தினமும் பூஜை செய்வதற்காக சூரியனை நியமித்தார் பிரம்மா. இதன் காரணமாகவே சூரிய குலத்தவர்களின் குல தெய்வமானார் ஸ்ரீரங்கநாதர்.

ஸ்ரீரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதால் இதை சுயம்பு என்று கூறுவர். இத்தகைய சிறப்புமிக்க மூலவருக்கு, நித்திய பூசை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

பிறகு சூரிய குலத்தில், அதாவது ரகு வம்சத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

தசரதன், ராமர் உள்ளிட்டோர் இச்சிலையை வழிபட்ட நிலையில், இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு ராமர் பரிசாகக் கொடுத்தார்.

இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், திருச்சி காவிரியாற்றின் கரையை அடைந்தான்.

அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று எண்ணினான். அப்போது அங்கு ஒரு சிறுவன் ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான்.

அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு, கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு காவிரியில் நீராடினான் விபீஷணன் . நீராடி திரும்பும் முன்னரே சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான்.

விபீஷணன் அந்த சிலையை எடுக்க முயன்றும் முடியவில்லை. சிறுவனாக வந்த விநாயக பெருமான், ‘சிலையை கீழே வைத்தது நான் தான்’ என்று கூறி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்தார்.

‘அயோத்தியில் இருந்த ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று தவம் இயற்றிய தர்மவர்ம சோழன் விருப்பப்படியே காவிரிக்கரையில் தங்கியிருக்க ரங்கநாதர் விருப்பம் தெரிவித்தார்.

அதேநேரத்தில் விபீஷணனுக்காக, “தென்திசை இலங்கை நோக்கி பள்ளிக் கொண்டருள்வதாக” ரங்கநாதர் உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின்னர், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் முழுவதும் மணலால் மூடப்பட்டது.

ஒரு கிளியின் உதவியுடன் கோயிலை கண்டுபிடித்ததால், கிளிச் சோழன் என்றும், கிள்ளிவளவன் என்றும் அம்மன்னன் அழைக்கப்படுகிறார், அவர்தான் ஸ்ரீரங்கம் கோயிலை புரனமைத்து, ரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோயிலை கட்டினார்.

தற்போதைய ஸ்ரீரங்கம் கோயில் தங்க விமானம், ராமர் கையினால் பெற்று, விபீஷணன் அயோத்தியில் இருந்து கொண்டு வந்ததுதான்.

இது தான் அயோத்தி ராமர் கோவிலுக்கும், திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு உண்டான தொடர்ப்பு.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Next Post

அசாமில் வெடிபொருட்கள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

Related News

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies