U -19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தொடக்க நாளான இன்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சென்வெஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக திவான் மரைஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் 47 ரன்களும், டேவிட் டீகர் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க தொடக்க வீரராக களமிறங்கிய லுவான் 6 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது. மேற்கிந்திய அணியில் அதிகபட்சமாக நாதன் சீலி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நாதன் எட்வர்ட் மற்றும் தேஷான் ஜேம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்திய அணி.

மேற்கிந்திய அணி 41வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய அணிக்கு ஆரம்பவே அதிர்ச்சியாக அமைந்தது.

17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 10 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் எல்லைக்கே சென்றது.

அப்போது மேற்கிந்திய விக்கெட் கீப்பர் ஜுவல் ஆண்ட்ரூ – நேதன் சீலி கூட்டணி அமைத்தது. ஒரு பக்கம் நேதன் சீலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இன்னொரு பக்கம் ஆண்ட்ரூ அதிரடியாக விளையாடினார்.

ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகள் பறந்து கொண்டே இருந்தது. இதன் மூலம் 40 பந்துகளில் அரைசதம் அடித்த ஆண்ட்ரூ, அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். தென்னாப்பிரிக்கா பவுலர் ஆலிவர் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களை விளாசி வெளுத்து கட்டினார் ஆண்ட்ரூ. இதனால் மேற்கிந்திய அணி 150 ரன்களை எட்டியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரூ 71 பந்துகளில் சதம் அடித்து அசத்தல், மேற்கிந்திய அணியின் ஸ்கோரும் 31 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 96 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பௌண்டரீஸ் உட்பட 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்திய அணி 40.1 ஓவர்களில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: u 19 world cupu19U-19 World Cup: South Africa win!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்! : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies