மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 6-து பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
2019 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, மோடி 2.0 அரசாங்கத்தில் நிதி இலாகாவை நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த வாரத்தில் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி தேதி இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் சீதாராமன் தனது முன்னோடிகளான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா உட்பட, தொடர்ந்து ஐந்து பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனைகளை முறியடிக்க உள்ளார்.
தேசாய், நிதியமைச்சராக இருந்தபோது, 1959 முதல் 1964 வரை ஐந்து ஆண்டு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். மேலும் 1970-71 இல் இந்திரா காந்திக்குப் பிறகு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டானது ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை அரசாங்கத்திற்கு செலவு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான செலவினங்களைச் சமாளிப்பதற்கு விகித அடிப்படையில் இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து நிதியை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கிறது