ஜார்கண்ட் முதல்வர் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், சொகுசு கார்கள் பறிமுதல்!
Oct 1, 2026, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் முதல்வர் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், சொகுசு கார்கள் பறிமுதல்!

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம்  ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர்  ஹேமந்த் சோரன் மீது சுரங்க ஒதுக்கீடு வழக்கு, நில மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இரு  வழக்குகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், நில மோசடி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம்  அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 30ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

சோரனின் தெற்கு டெல்லி இல்லத்திற்கு அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த  நேற்று சென்றனர். ஆனால் அவர்  வீட்டில் இல்லை. இதனால்  அமலாக்கத்துறையினர்  சுமார்  13 மணி நேரம் அங்கேயே  முகாமிட்டனர்.

இதனிடையே முதல்வர் தலைமறைவாகியுள்ளதாகவும் ஆளுநர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் ஹேமந்த் சோரன் டெல்லி இல்லத்தில் இருந்து ரூ. 36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

மாயமான ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள இல்லத்திற்கு இன்று திடீரென வருகை தந்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்ட அவர், வரும் புதன்கிழமை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: Jharkhand CM Hemant SorenEnforcement departmentmoney launderingSouth Delhi residence
Share
Tweet
SendShare
Previous Post

சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவு!

Next Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies