கடல்சார் பாதுகாப்பு! - இந்தியக் கடற்படை
Sep 21, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல்சார் பாதுகாப்பு! – இந்தியக் கடற்படை

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியக் கடற்படை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, இது வரை மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர்,

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியக் கடற்படைப் பிரிவுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், இந்தியக் கடற்படைப் பிரிவுகள் கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவ்வப்போது ஏற்படும் தற்செயல் நிகழ்வுகளுக்குத் தீர்வு காணவும் கண்காணிப்பை மேற்கொள்கின்றன.

2008 முதல், இந்தியக் கடற்படை ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வளைகுடா பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியக் கடற்படை, பிற கடல்சார் படைகளுடன் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், அச்சுறுத்தல்களை ஒத்துழைப்பு முறையில் எதிர்கொள்ளவும் இருதரப்பு, பலதரப்பு கடல்சார் பயிற்சிகள், கூட்டுப் பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு, நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்த ரோந்து ஆகியவற்றை இந்தியக் கடற்படை மேற்கொண்டு வருகிறது.

கடற்கொள்ளையை தடுப்பதற்கான தகவல் பரிமாற்றத்திற்காக 25 பங்கெடுப்பாளர் நாடுகளுடன், 40-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பன்னாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் மையம் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்ற அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: indian navynew parliment
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

Next Post

விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! – ஆப்பு வைத்த மத்திய அரசு!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies