ஜேஇஇ முதன்மை தேர்வு 2024-க்கு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 31 ஆயிரத்து 874 ஆகும். இது கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகம் ஆகும்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ), ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக முதன்மை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2024 – 25 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு 12 இலட்சத்து 31 ஆயிரத்து 874 பேர் பதிவு செய்தனர். இது கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகும். இந்த தேர்வில் அதிகபட்ச மாணவர்களின் வருகை பதிவாகி உள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். நாடு முழுவதும் தாள் 1-க்கான பிஇ/பிடெக் வருகை சதவீதம் 95.8 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், தாள் 1 பிஇ/பிடெக் தேர்வில் சுமார் 88.2 சதவீத மாணவர்கள் தோற்றனர். அதேசமயம், தாள் 2 BArch/B.Planning தேர்வில் 57.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு தாள் 1 பிஇ/பிடெக் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் 95.8 ஆகும். இருப்பினும், இந்த ஆண்டு 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுடன் ஒப்பிடும்போது, 2023-ல் கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். 2023-ல், 69.8 சதவீத மாணவர்கள் தாள் 2 BArch/BPlanning தேர்வில் கலந்து கொண்டனர்.