நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!
May 15, 2026, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதத் தலைவர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் கீழ், 24 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மத ஒற்றுமையின் செய்தியை வெளி உலகுக்கு கூற விரும்புவதாக தெரிவித்தனர்.

இக்குழுவில் சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி மாதங்களை சேர்ந்தவர்களும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி மற்றும் மகாபோதி சர்வதேச தியான மையத்தின் நிறுவனர் பிக்கு சங்கசேனா ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்ற வளாகத்தில் மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப்பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார். மேலும், மதத் தலைவர்களை சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் அனைத்து சிறுபான்மை மதத் தலைவர்களும் கூறியதாவது,“நம்முடைய சாதிகள், பழக்கவழக்கங்கள், மதங்கள், பிரார்த்தனை முறைகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் மனிதனாகிய நமது மிகப்பெரிய மதம் மனிதநேயம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழ்கிறோம்.

நாம் அனைவரும் பாரதத்தில் வாழ்பவர்கள். வாருங்கள் நம் நாட்டை பலப்படுத்துவோம். நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவது நெருங்கிவிட்டது. அது நடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் இந்தக் காட்சிகள் நமது காலம் மாறிவருகிறது என்பதற்குச் சான்று.”, என்று கூறினர்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளையின் நிறுவனர் ஹிமானி சூட் கூறுகையில், இந்த அறக்கட்டளை 24 மதத் தலைவர்களைக் கொண்ட குழுவை புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவைரை சந்தித்தோம். “நமது தேசம் ஒன்றல்ல, எல்லா மதங்களும் ஒன்றாக நிற்பதில்லை என்று ஒரு கதை உருவாக்கப்படுகிறது. நாம் ஒன்றாக நிற்போம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை ஆதரிப்போம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ் ?

Next Post

மாற்றத்தை ஏற்படுத்தும் முத்ரா திட்டம்! – பிரதமர் மோடி

Related News

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

மே மாத மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்; முதலமைச்சர் விஜய் உறுதி

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு – நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிப்பு!

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் மிக முக்கிய தளமாக இருக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு!

மே மாத மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக தோல்வி எதிரொலி – பென் நிறுவனம் கலைப்பு?

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு ஆய்வு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்தரை தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் – 5 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது – ஸ்ரீதர் வேம்பு

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு எதிரான பெங்களூரு அபார வெற்றி!

டெல்லியில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு!

நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? – கே.பி.முனுசாமி கேள்வி!

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies