கிரிக்கெட் ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டு கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீர் கிரிக்கெட் சங்க (JKCA) நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த போது பல்வேறு நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
2001ல் இருந்து 2012 க்கு இடையில், ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.112 கோடி வழங்கியது, இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் கிரிக்கெட் சங்க நிதியை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக நடந்துள்ள பணமோசடி வழக்கில், பரூக் அப்துல்லாவிற்கு கடந்த ஜனவரி 11-ல் ஆஜராக சம்மன் அனுப்பியது.
பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.