இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா…? என மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மீண்டும் மீண்டும் – தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..! தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
மீண்டும் மீண்டும் – தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்யமுடியாது…
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 12, 2024
அதைக் கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது. தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கிற அமைச்சர் போல செயல்படுகிறார்.
இது தான் ஜனநாயகமா? இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா? தேசிய கீதத்தைப் புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா…? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.