மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக அட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்தார்.
குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமி த் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை வகுத்தார். ஒரு திட்டத்தை வகுத்து, கடின உழைப்புடன் செயல்படுத்தும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ., 370 தொகுதிகளை கைப்பற்றும். தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும். மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும். அப்போது, 3வது பெரிய நாடாக பாரதம் மாறும் என அவர் தெரிவித்தார்.