இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் !
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் !

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பௌண்டரி மற்றும் 12 சிக்சர் என மொத்தமாக 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து இரண்டாவது  இன்னிங்ஸ் தொடங்கியது.  பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பௌண்டரி மற்றும் 12 சிக்சர் என மொத்தமாக 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக ஜாம்பவான் வீரரான வினோத் காம்ப்ளி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசியுள்ளனர்.

அதேபோல் இரட்டை சதம் விளாசிய அடுத்த 2 பந்துகளில் சிக்ஸ் அடித்த ஜெய்ஸ்வால், இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார்.  இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்  என்ற வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்துள்ளார்.

1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான்  அணியின் வாசிம் அக்ரம் 12 சிக்சர்களை விளாசியதே உலக சாதனையாக இருந்தது.  தற்போது இந்த இன்னிங்ஸில் 12 சிக்சர்களை விளாசி வாசிம் அக்ரம் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 22 வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags: Indiaenglandtest cricketJaishwal
Share
Tweet
SendShare
Previous Post

அதிர்ச்சி – கடலுக்கு நடுவே சூறாவளி!

Next Post

வரலாற்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் மகளிர் அணி !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies