வரலாற்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் மகளிர் அணி !
Sep 20, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் மகளிர் அணி !

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியா !

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 03:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய மகளிர் அணி காலிறுதிச்சுற்றில் ஹாங்காங்குடன் விளையாடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பின்பு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்துடன் விளையாடியது. இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

தாய்லாந்து 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. பிவி சிந்து நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு இந்த தொடரில் இடம் பெற்று இந்திய அணியை வழிநடத்தினார்.

பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்.

அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

அதேபோல் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.

இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன. கடைசியாக வெற்றை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.

இதன் மூலமாக இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்னதாக கடந்த 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இந்திய ஆண்கள் அணி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி தங்கம் பதக்கத்தை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Tags: Indiagold medalAsia badminton
Share
Tweet
SendShare
Previous Post

இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் !

Next Post

தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies