ஐ.நா சீர்திருத்தத்தை நிரந்தர உறுப்பு நாடுகளின் குறுகிய பார்வை தடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ஐ.நா நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். ஆனால், குறிப்பிட்ட சில நாடுகளிடமிருந்து ஒப்புதலைப் பெறுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக இடம்பெற்றிருக்கும் 5 நாடுகளின் குறுகிய பாா்வை அணுகுமுறையே, ஐ.நா. அமைப்பின் சீா்திருத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத் தடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியா 4 முறை உறுப்பினராக இருந்துள்ளது. ஆனாலும் நிரந்தரமில்லா உறுப்பு நாடாகவே இந்தியா தொடர முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தத்தைப் பொருத்தவரை, மிகப் பெரிய எதிராளி மேற்கத்திய நாடு அல்ல என்று அவர் மறைமுகமாக சீனாவை அவர் குறிப்பிட்டார்.