சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Jun 14, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெட்ரோ இரயில்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 15 ஆயிரம்  பயணிகள் பயணம் செய்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு  பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, மொத்தம் 86 லட்சத்து 15 ஆயிரத்து 8 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி 3 லட்சத்து 26 ஆயிரத்து 786 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35 லட்சத்து 5 ஆயிரத்து 644 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 38 லட்சத்து 94 ஆயிரத்து 639 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 28 ஆயிரத்து 640 பயணிகள், குழு  பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5 ஆயிரத்து 959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 11 லட்சத்து 80 ஆயிரத்து 126 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: metro railChennai Metro Rail CorporationChennai Metro trains
ShareTweetSendShare
Previous Post

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை : ஒரு சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு!

Next Post

ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies