WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Jul 29, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 19-வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

இதில் அதிகபட்சமாக சஜீவன் சஜனா 30 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க ஹேலி மேத்யூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பிரியங்கா பாலா 19 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோஃபி மோலினக்ஸ் 4வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஸ்ம்ரிதி மந்தனா 11 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சோஃபி டெவின் 4 விக்கெட்களில் ஆட்டமிழக்க 6வது ஓவர் முடிய பெங்களூரு அணி 39/3 என்ற நிலையில் இருந்தது.

பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கியது. இறுதியாக எல்லிஸ் பெர்ரி 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 40 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

15 ஓவர்கள் முடிய பெங்களூர் அணி 3 இக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் எல்லிஸ் பெர்ரிக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLWPL: Royal Challengers Bengaluru team win!
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

Next Post

அதிசயம், ஆனால் உண்மை : சிவன் கோவில் லிங்கம் மீது சூரிய ஒளி!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies