2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
Sep 12, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 10:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரின் மூன்றாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ளது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 2 பௌண்டரீஸ் அடித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடி வந்த யசஸ்வி ஜைஸ்வால் 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 5 வது ஓவர் முடிவில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் பராக் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை எடுத்தார்.

அதேபோல் சிறப்பாக விளையாடி வந்த பராக் அவரும் அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் 15வது ஓவரில் 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 29 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மையர் 5 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கினார் இளம் வீரர் துருவ் ஜூரல். சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் கூட்டணியும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர்.

பின்னர் 20 ஓவர்கள் முடிவில் துருவ் ஜூரல் 1 பௌண்டரி மற்றும் 1 சிக்சர் என 12 பந்துகளில் 20* ரன்களை எடுத்தார். அதேபோல் சஞ்சு சாம்சன் 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என மொத்தமாக 52 பந்துகளில் 82* ரன்களை எடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக நவீன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேபோல் ரவி பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 என்ற பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க வீரரான குவின்டன் டி காக் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தேவதூத் படிக்கல் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் படோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 44 பந்துகளில் 58 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 26 ரன்களில் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.

Tags: t20ipl 20242024 IPL: Rajasthan Royals win!
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேச முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies