பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்! - 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!
Sep 9, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்! – 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.  தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தகவலைப் பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். 

பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் கூட பல முறை நடந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் வலுவாக இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

அப்படியொரு தாக்குதல் தான் மீண்டும் பாகிஸ்தான் நாட்டில் இப்போது நடந்துள்ளது. சீன நாட்டவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதைச் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்த நிலையில், சீன பொறியாளர்கள் பலரும் அந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களில் சிலர் இஸ்லாமாபாத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு என்ற இடத்திற்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காரில் பயணித்த சீனாவைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக யதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் முகமது அலி கந்தாபூர் தெரிவித்தார். அவர்களுடன் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த கைபர் பக்துன்க்வா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய கார்களுக்கு பின்னால் சென்ற மற்ற கார்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.  சீனப் பொறியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags: Suicide attack in Pakistan! - 6 people lost their bodies!
Share
Tweet
SendShare
Previous Post

திடீர் வெடிச்சத்தம் – அதிர்ந்த வீடுகள் – திடுக்கிட்ட மக்கள் – திருவாரூர் திகில்

Next Post

நாடாளுமன்ற தேர்தல் : 6-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies