எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாக ஆனால், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என உத்தரப்பிரதேச துணை முதல்வர் மௌரியா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், கட்சியில் சேருபவர்களுக்கு இது தெரியும் என்றும் கூறினார். அவர்களும் எங்கள் சித்தாந்தத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மௌரியா தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற பேச்சுக்களில் உண்மை இல்லை. என்றும், மோடி அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதகாவும், அவர்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள சிலருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவார்கள் என்றும் மௌரியா தெரிவித்தார்.