ஐபிஎல் கிரிக்கெட் : தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி !
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி !

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரின் 16-வது போட்டி நேற்று மாலை 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக சுனில் நரைன் 7 பௌண்டரீஸ், 7 சிக்சர்கள் என மொத்தம்  39 பந்துகளில் 85 ரன்களை எடுத்து 13 வது ஓவரில் மிச்சேல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஆன்ட்ரே ரசல் 4 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தம் 41 ரன்கள் எடுத்த போது இஷாந்த் சர்மா வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும், ரிங்கு சிங் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக பெரிய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 18 ரன்களிலும், ப்ரித்வி ஷாவ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய மிச்சேல் மார்ஷ் மற்றும் அபிஷேக் டக் அவுட் ஆக‘ டெல்லி அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே எடுத்து தவித்து வந்தது.

அப்போது களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது.

இதில் ரிஷப் பந்த் 4 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 55 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி மற்றும் வைபவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். மிச்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினர். ரசல் மற்றும் சுனில் நரேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரின் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும் இந்த போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: iplDelhi capitalsKolkata knight ridersKKR wonHat-trick win
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்திற்கு எதிராக பேச முடியாது : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப்  அறிவிப்பு!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல் ( 04/04/2024 )

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies